Pothu tamil

திணைமாலை நூற்றைம்பது

August 4, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

திணைமாலை நூற்றைம்பது திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல். கணிமேதாவியார் என்பவர் இதனை இயற்றினார். இன்னொரு பதினெண்கீழ்க்கணக்கு நூலான ஏலாதியும் இவர் இயற்றியதே. இந்நூல் ஐந்து நிலத்திணைகளினது பின்னணியில் இயற்றப்பட்டுள்ளது. இது பின்வரும் முறையில் வகுக்கப்பட்டுள்ளன. 1 குறிஞ்சி 1 தொடக்கம் 31 வரை 31 பாடல்கள் 2 நெய்தல் 32 தொடக்கம் 62 […]

Pothu tamil

களவழி நாற்பது

August 4, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

களவழி நாற்பது பதினெண்கீழ்க்கணக்கு நூற் தொகுப்பில் உள்ள நூல்களுள் புறப்பொருள் கூறுகின்ற ஒரே நூல் களவழி நாற்பது. சோழ மன்னனான கோச்செங்கணானுக்கும், சேரமான் கணைக்காலிரும்பொறைக்கும் இடையே கழுமலத்தில் இடம் பெற்ற போரின் பின்னணியில் எழுதப்பட்டது இந் நூல். இதை எழுதியவர் பொய்கையார் என்னும் புலவர். இவர் சேர மன்னனுடைய நண்பன். நடைபெற்ற போரில் சேரன் தோற்றுக் கைதி ஆகிறான். அவனை விடுவிக்கும் நோக்கில் பாடப்பட்டதே இந் நூல் எனக் கருதப்படுகின்றது. […]

Pothu tamil

இனியவை நாற்பது

August 4, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

இனியவை நாற்பது பூதஞ்சேந்தனார் என்பவர் இயற்றிய நூல் இனியவை நாற்பது. இது நாற்பது வெண்பாக்களினால் ஆனது. பண்டைக்காலத் தமிழ்நூல் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று. உலகில் நல்ல அல்லது இனிமையான விடயங்களை எடுத்துக் கூறுவதன் மூலம் மக்களுக்கு நீதி புகட்டுவதே இந்நூலின் நோக்கம். ஒவ்வொரு பாடலும் மூன்று நல்ல விடயங்களை எடுத்துக் கூறுகின்றது. எடுத்துக்காட்டு : சுற்றியிருப்பவர்களுக்குக் கல்வி கற்பித்தல் மிகவும் நல்லது; கற்றறிந்த பெரியோர்களைத் துணை […]

Pothu tamil

நான்மணிக்கடிகை TNPSC

August 4, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

நான்மணிக்கடிகை நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந் நூல் நூற்றியொரு பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளால் ஆனது இந் நூற் பாடல்கள் ஒவ்வொன்றிலும், நான்கு மணியான கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. இதனாலேயே இது நான்கு வகை மணிகளால் ஆன ஆபரணம் நான்மணிக்கடிகை என்று அழைக்கப்படுகிறது. இதில் மொத்தம் நூற்று நான்கு பாடல்கள் உள்ளன. இவற்றில் […]

Pothu tamil

நாலடியார் -TNPSC

August 4, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

நாலடியார் நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இதனால் இது நாலடி நானூறு எனவும் பெயர் பெறும். ‘வேளாண் வேதம்’ என்ற பெயரும் உண்டு. பல நேரங்களில் இது புகழ் பெற்ற தமிழ் நீதி நூலான திருக்குறளுக்கு இணையாகப் பேசப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது. […]

Pothu tamil

திருக்குறள்

August 4, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

திருக்குறள் திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகபொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது. இதனை இயற்றியவர் கி.மு. 2 ம் நூற்றாண்டுக்கும் கி.பி 5 ம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்களால் கருதப்படும் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர் ஆவார். திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் […]

Pothu tamil

எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்தல்

August 4, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்தல் மோனைத்தொடை:செய்யுளில் முதலெழுத்து ஒன்றி வருவது மோனை எனப்படும். மோனை தொடை எட்டு வகைப்படும். அடிமோனை அடிதோறும் வரும் முதற்சீரின் முதலெழுத்து ஒன்றி வருவது அடிமோனையாகும். எ.கா. உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்உள்ளத்து ளெல்லாம் உளன் இணைமோனை ஓரடியில் முதலிரு சீர்களிலும் வருவது இணைமோனையாகும். எ.கா. கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்முடிந்தாலும் பீழை தரும் பொழிப்பு மோனை ஓரடியில் முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை வருவது பொழிப்பு மோனையாகும். எ.கா. புனையா […]

Pothu tamil

தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்

August 4, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல் வினை வகைகள்: வினைச்சொற்கள் முற்று, எச்சம் என்பதாக மட்டுமன்றி, அவை பயன்படு வதன் அடிப்படையில் பலவாகப் பகுத்துரைக்கப்படுகின்றன. அவ்வகையில், தன்வினை, பிறவினை; செய்வினை, செயப்பாட்டுவினை; உடன்பாட்டுவினை, எதிர்மறைவினை என்பன போன்ற பல வகைப்பாடுகள் உள்ளன. தன்வினை, பிறவினை தன்வினை என்பது ஒருவர் தானே செய்வது. பிறவினை என்பது பிறரைச் செய்யும்படி ஆக்குவது. கரையைச் சேர்வான் என்னும் தொடரில், சேர்தலாகிய தொழிலை ஒருவன் […]

Pothu tamil

எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்

August 4, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் தனி வாக்கியம்: ஒரு எழுவாய் அல்லது பல எழுவாய் ஒரு பயனிலையைக் கொண்டுமுடிந்தால் அது தனி வாக்கியம்எ.கா. பாண்டியர் முத்தமிழ் வளர்த்தனர்சேர, சோழ, பாண்டியர் தமிழ் வளர்த்தனர் தொடர் வாக்கியம்:  தனி வாக்கியங்கள் பல தொடர்ந்து வரும். ஒரு எழுவாய் பல பயனிலை      களைக்கொண்டுமுடியும். தனி வாக்கியங்கள் பல தொடர்ந்து வந்து இடையில் ஆகையால், அதனால் எனும்இணைப்புச் சொற்கள் வெளிப் படையாக வரும். பல வினையெச்சங்களைக் கொண்டு இறுதியில்வினை முற்றைக் கொண்டு முடியும்.    எ.கா. ராமன் திருச்சி சென்றான்; மலைக்கோட்டை ஏறினான்; கடவுளை  வழிபட்டான். நாகம் இடியோசை கேட்டது; அதனால் நடுங்கியது. கலவை வாக்கியம் :  ஓர் முதன்மை வாக்கியத்துடன் ஒன்று அல்லது பல சார்பு வாக்கியங்கள்          இணைந்துவருமாயின் அது கலவை வாக்கியம் எனப்படும்     எ.கா. மேகம் கருத்ததால் மழை பெருகியது. யார் திறமையாகப் படிக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவர். கட்டளை வாக்கியம்:  பிறரை ஏவுகின்ற முறையிலும் கட்டளையிடும் முறையிலும் அமைந்துவருமாயின் அது கட்டளை வாக்கியம். இதில் இறுதிச் சொல் வேர்ச் சொல்லாகவரும்.     எ.கா. அறம் செய்.தண்ணீர் கொண்டு வா.இளமையில் கல். வினா வாக்கியம்: வினாப் பொருளைத் தரும் வாக்கியம் வினா வாக்கியம்.வினா எழுத்துக்களாவன; ஆ, எ, ஏ, ஓ, யா ஆகும்.எ.கா. இது சென்னைக்கு         செல்லும் வழியா?நீ மனிதனா? – ஆநீ தானே? – ஏஉளரோ? – ஓ  உணர்ச்சி வாக்கியம்: மகிழ்ச்சி, துன்பம், வியப்பு போன்ற உள்ளத்து உணர்வுகள் வெளிப்படுமாறுவாக்கியம் அமையுமாயின் அது உணர்ச்சி வாக்கியம்     எ.கா. ஆ! தாஜ்மஹால் என்ன அழகு!ஐயகோ! நேருஜி மறைந்தாரே! செய்தி வாக்கியம்: ஒரு செய்தியைத் தெளிவாக தெரிவிக்கும் வகையில் அமைவதே செய்திவாக்கியம்    […]

Pothu tamil

விடைக்கேற்ற வினாவை தேர்ந்தெடுத்து எழுதுதல்

August 4, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

விடைக்கேற்ற வினாவை தேர்ந்தெடுத்து எழுதுதல் கொடுக்கப்பட்டிருக்கும் சொற்றொடர் விடை வடிவத்தில் இருந்தால், இதற்குரிய சரியான வினாவை கண்டுபிடிக்கும் பயிற்சி தான் விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கும் பயிற்சி. இது ஒவ்வொரு அரசுத் தேர்விலும் கேட்கப்படுகிறது. பொதுவாக வினா, என்பது ஆறு வகைப்படும். 1. அறிவினா 2. அறியாவினா 3. ஐய வினா 4. கொளல் வினா 5. கொடை வினா 6. ஏவல் வினா. 1. அறிவினா தான் தெரிந்தவற்றை வேரு […]