சந்திப்பிழை நீக்கி எழுதுதல்

April 11, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

வல்லினம் மிகும் இடங்கள் 1. அந்த, இந்த, எந்த, அப்படி, இப்படி, எப்படி என்றும் சொற்களின் பின் வல்லினம்மிகும்.(எ.கா)அந்தத் தோட்டம்             இந்தக் கிணறு             எந்தத் தொழில்             அப்படிச் செய்தான்             இப்படிக் கூறினான்             எப்படிப் பார்ப்போம் 2. இரண்டாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை விரிகளில் வல்லினம் ஆகும்.(எ.கா)பொருளைத் தேடினான்             புத்தகத்தைப் படித்தான்             ஊருக்குச் சென்றான்            தோழனுக்குக் கொடு 3. ஆய், போய் எனும் வினையெச்சங்களின் பின் வல்லினம் ஆகும்.(எ.கா)படிப்பதாகச் சொன்னார்            போய்ச் சேர்ந்தான் 4. சால, தவ எனும் உரிச்சொற்களின் பின் வல்லினம் ஆகும்.(எ.கா)சாலப் பேசினான்             தவச் சிறிது 5. இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தாம் வேற்றுமை உருபும் உடன் தொக்க தொகைகளின் பின்மிகும்.(எ.கா)தண்ணீர்ப்பானை, மரப்பலகை, சட்டைத்துணி […]

No Image

இலக்கண குறிப்பறிதல் – வினைத்தொகை

April 11, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

வினைத்தொகை:  வினை என்பது ஒரு செயலை (வினை) குறிக்கும் சொல் வினைச்சொல்லாகும். இது நிகழ்காலம், எதிர்காலம், இறந்த காலம் என மூன்று காலங்களிலும் வரும். அவ்வாறு மூன்றுகாலங்களிலும் வரக்கூடியச் சொற்களை வினைத் தொகை என்கிறோம்.  எடுத்துக்காட்டு: முழங்கும் முரசு இச்சொல் மூன்று காலங்களில் வரும். எப்படி என்றால், முழங்குகின்ற முரசு – இது நிகழ்காலம். அதாவது இப்போது முழங்கிக்கொண்டிருக்கிறது என பொருள் கொள்ளலாம். முழுங்கும் முரசு – எதிர்காலம். எதிர்காலத்தில் முழங்கும் முரசு. […]

இலக்கண குறிப்பறிதல் – உவமைத் தொகை

April 11, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

உவமைத் தொகை:  மலர்விழி என்ற சொல் உவமைத் தொகைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.  இதில் மலர்விழி என்பதன் முழுத்தொடர் மலரைப் போன்ற விழி என்பதே மலர்விழி என சுருங்கிற்று.  அதாவது மலரைப் போன்ற விழியை உடையவள் என்று குறிப்பிடலாம். இதில் “போன்ற” என்ற உவம உருபு மறைந்து வருவதால் இது உவமைத்தொகையாகிற்று. மலர்விழி என்ற சொல்லில் மலர் என்பது உவமை. விழி என்பது உவமேயம்.  உவமைக்கும் உவமேயத்திற்கு இடையே போன்ற “போல”, “போன்ற”, “அன்ன” என்ற உவம உருபுகள் மறைந்து […]

இலக்கணக் குறிப்பறிதல் – பண்புத்தொகை

April 11, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

பண்புத்தொகை:  சொற்களைப் பிரித்தால் நிலைமொழியில் “மை” விகுதி பெற்றுவரும் சொற்களனைத்தும் பண்புத்தொகை ஆகும். “தொன்னிறம்” இச்சொல்லைப் பிரிக்கும்போது “தொன்மை+நிறம்” எனப் பிரியும். இதில் நிலைமொழியில் “மை” விகுதி சேர்ந்து வந்திருப்பதால் இச்சொல்லிற்கான சரியான இலக்கணக்குறிப்பு பண்புத்தொகையாகும்.  உதாரணச் சொற்கள் ஒரு சிலவற்றைப் பார்ப்போம். இன்னுயிர் – இனிமை + உயர் ==> பண்புத்தொகைபைங்கூழ் – பசுமை + கூழ் ==> பண்புத்தொகைசெவ்வேள் – செம்மை + வேள் ==>பண்புத்தொகை இவ்வாறு பண்புத் […]

தமிழ் இலக்கணம் (வகைகள்)

April 11, 2019 MADHAVAKRISHNA ACADEMY 1

தமிழ் இலக்கணத்தில் ஐந்து வகைகள் உள்ளன.  1. எழுத்திலக்கணம் 2. சொல்லிலக்கணம் 3. பொருளிலக்கணம் 4. யாப்பிலக்கணம் 5. அணியிலக்கணம் எழுத்திலக்கணம்: எழுத்து இருவகைப்படும். அவைகள்:அ. முதலெழுத்து      ஆ. சார்பெழுத்து அ.முதலெழுத்து: அ முதல் ஔ வரையிலான உயிரெழுத்து பன்னிரண்டும், க் முதல் ன் வரையிலான மெய்யெழுத்து பதினெட்டும் முதலெழுத்து எனப்படும். ஆ.சார்பெழுத்து: முதலெழுத்தை சார்ந்து இயங்கும் எழுத்துக்கள் சார்பெழுத்துகள் எனப்படும். சார்பெழுத்துகள்  பத்து வகைப்படும். அவைகள்: 1.உயிர்மெய்      […]

ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்

April 11, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால் அதற்கு ஓரெழுத்து ஒரு மொழிச் சொல் என்று பெயர்.  உதாரணம்: தை.. இந்த “தை” என்ற எழுத்தானது தமிழ்மாதங்களில் ஒன்றான மாதத்தின் பெயரைக் குறிக்கும் எழுத்தாகும். இதே எழுத்து “தைத்தல்” “பொருத்துதல்” என்ற பொருளிலும் வரும். இவ்வாறு ஒரே […]