Pothu tamil

இன்னா நாற்பது :

August 4, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

இன்னா நாற்பது கபிலர் என்னும் புலவர் இயற்றியது இன்னா நாற்பது என்னும் நூல். நாற்பத்தொரு பாடல்களைக் கொண்ட இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூற்றொகுதியுள் அடங்குவது. உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறி நீதி உரைப்பது இந்நூல். இது கி. பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த நூலாகும். இந்நூல் இன்னிசை வெண்பாக்களால் ஆனது. இதில் நூற்று அறுபத்து நான்கு கூடாச் […]

Pothu tamil

நான்மணிக்கடிகை TNPSC

August 4, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

நான்மணிக்கடிகை நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந் நூல் நூற்றியொரு பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளால் ஆனது இந் நூற் பாடல்கள் ஒவ்வொன்றிலும், நான்கு மணியான கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. இதனாலேயே இது நான்கு வகை மணிகளால் ஆன ஆபரணம் நான்மணிக்கடிகை என்று அழைக்கப்படுகிறது. இதில் மொத்தம் நூற்று நான்கு பாடல்கள் உள்ளன. இவற்றில் […]

Pothu tamil

நாலடியார் -TNPSC

August 4, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

நாலடியார் நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இதனால் இது நாலடி நானூறு எனவும் பெயர் பெறும். ‘வேளாண் வேதம்’ என்ற பெயரும் உண்டு. பல நேரங்களில் இது புகழ் பெற்ற தமிழ் நீதி நூலான திருக்குறளுக்கு இணையாகப் பேசப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது. […]

Pothu tamil

திருக்குறள்

August 4, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

திருக்குறள் திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகபொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது. இதனை இயற்றியவர் கி.மு. 2 ம் நூற்றாண்டுக்கும் கி.பி 5 ம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்களால் கருதப்படும் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர் ஆவார். திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் […]

Pothu tamil

எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்தல்

August 4, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்தல் மோனைத்தொடை:செய்யுளில் முதலெழுத்து ஒன்றி வருவது மோனை எனப்படும். மோனை தொடை எட்டு வகைப்படும். அடிமோனை அடிதோறும் வரும் முதற்சீரின் முதலெழுத்து ஒன்றி வருவது அடிமோனையாகும். எ.கா. உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்உள்ளத்து ளெல்லாம் உளன் இணைமோனை ஓரடியில் முதலிரு சீர்களிலும் வருவது இணைமோனையாகும். எ.கா. கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்முடிந்தாலும் பீழை தரும் பொழிப்பு மோனை ஓரடியில் முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை வருவது பொழிப்பு மோனையாகும். எ.கா. புனையா […]

Pothu tamil

தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்

August 4, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல் வினை வகைகள்: வினைச்சொற்கள் முற்று, எச்சம் என்பதாக மட்டுமன்றி, அவை பயன்படு வதன் அடிப்படையில் பலவாகப் பகுத்துரைக்கப்படுகின்றன. அவ்வகையில், தன்வினை, பிறவினை; செய்வினை, செயப்பாட்டுவினை; உடன்பாட்டுவினை, எதிர்மறைவினை என்பன போன்ற பல வகைப்பாடுகள் உள்ளன. தன்வினை, பிறவினை தன்வினை என்பது ஒருவர் தானே செய்வது. பிறவினை என்பது பிறரைச் செய்யும்படி ஆக்குவது. கரையைச் சேர்வான் என்னும் தொடரில், சேர்தலாகிய தொழிலை ஒருவன் […]

Pothu tamil

எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்

August 4, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் தனி வாக்கியம்: ஒரு எழுவாய் அல்லது பல எழுவாய் ஒரு பயனிலையைக் கொண்டுமுடிந்தால் அது தனி வாக்கியம்எ.கா. பாண்டியர் முத்தமிழ் வளர்த்தனர்சேர, சோழ, பாண்டியர் தமிழ் வளர்த்தனர் தொடர் வாக்கியம்:  தனி வாக்கியங்கள் பல தொடர்ந்து வரும். ஒரு எழுவாய் பல பயனிலை      களைக்கொண்டுமுடியும். தனி வாக்கியங்கள் பல தொடர்ந்து வந்து இடையில் ஆகையால், அதனால் எனும்இணைப்புச் சொற்கள் வெளிப் படையாக வரும். பல வினையெச்சங்களைக் கொண்டு இறுதியில்வினை முற்றைக் கொண்டு முடியும்.    எ.கா. ராமன் திருச்சி சென்றான்; மலைக்கோட்டை ஏறினான்; கடவுளை  வழிபட்டான். நாகம் இடியோசை கேட்டது; அதனால் நடுங்கியது. கலவை வாக்கியம் :  ஓர் முதன்மை வாக்கியத்துடன் ஒன்று அல்லது பல சார்பு வாக்கியங்கள்          இணைந்துவருமாயின் அது கலவை வாக்கியம் எனப்படும்     எ.கா. மேகம் கருத்ததால் மழை பெருகியது. யார் திறமையாகப் படிக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவர். கட்டளை வாக்கியம்:  பிறரை ஏவுகின்ற முறையிலும் கட்டளையிடும் முறையிலும் அமைந்துவருமாயின் அது கட்டளை வாக்கியம். இதில் இறுதிச் சொல் வேர்ச் சொல்லாகவரும்.     எ.கா. அறம் செய்.தண்ணீர் கொண்டு வா.இளமையில் கல். வினா வாக்கியம்: வினாப் பொருளைத் தரும் வாக்கியம் வினா வாக்கியம்.வினா எழுத்துக்களாவன; ஆ, எ, ஏ, ஓ, யா ஆகும்.எ.கா. இது சென்னைக்கு         செல்லும் வழியா?நீ மனிதனா? – ஆநீ தானே? – ஏஉளரோ? – ஓ  உணர்ச்சி வாக்கியம்: மகிழ்ச்சி, துன்பம், வியப்பு போன்ற உள்ளத்து உணர்வுகள் வெளிப்படுமாறுவாக்கியம் அமையுமாயின் அது உணர்ச்சி வாக்கியம்     எ.கா. ஆ! தாஜ்மஹால் என்ன அழகு!ஐயகோ! நேருஜி மறைந்தாரே! செய்தி வாக்கியம்: ஒரு செய்தியைத் தெளிவாக தெரிவிக்கும் வகையில் அமைவதே செய்திவாக்கியம்    […]

Pothu tamil

விடைக்கேற்ற வினாவை தேர்ந்தெடுத்து எழுதுதல்

August 4, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

விடைக்கேற்ற வினாவை தேர்ந்தெடுத்து எழுதுதல் கொடுக்கப்பட்டிருக்கும் சொற்றொடர் விடை வடிவத்தில் இருந்தால், இதற்குரிய சரியான வினாவை கண்டுபிடிக்கும் பயிற்சி தான் விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கும் பயிற்சி. இது ஒவ்வொரு அரசுத் தேர்விலும் கேட்கப்படுகிறது. பொதுவாக வினா, என்பது ஆறு வகைப்படும். 1. அறிவினா 2. அறியாவினா 3. ஐய வினா 4. கொளல் வினா 5. கொடை வினா 6. ஏவல் வினா. 1. அறிவினா தான் தெரிந்தவற்றை வேரு […]

Pothu tamil

இலக்கண குறிப்பறிதல்

August 4, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

இலக்கண குறிப்பறிதல் எண்ணும்மை: கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் ‘உம்’  எனும் விகுதி வெளிப்படையாக வருமாயின்அதுஎண்ணும்மை எனப்படும். எ.கா.அல்லும் பகலும், காதலும் கற்பும, அவனும் இவனும் உம்மைத்தொகை: கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் ‘உம்’ எனும் சொல் வெளிப்படையாக தெரியாமல் மறைந்துவந்தால் அது உம்மைத்தொகை எனப்படும். எ.கா. அவன் இவன், இரவு பகல்,இராப்பகல் எனவே  ‘உம்’ எனும்  சொல்  வெளிப்படையாக வந்தால் அது எண்ணும்மை ஆகும்   அதுவேமரைந்து வந்தால் அது உம்மைத்தொகை. உரிச்சொற்றொடர்: ஒன்றை பெரிது படுத்திக் காட்டுவது உரிச்சொற்றொடர் ஆகும். எ.கா:மாநகரம், அதாவது  பெரிய  நகரம்  என்று  சொல்வதற்கு  பதிலாக  மாநகரம்  என்று சொல்கிறோம். இதுவே உரிச்சொற்றொடர் ஆகும். கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை மனதில் படித்துக் கொள்ளவும்.. சால,உறு, தவ, நனி, கூர், கழி, கடி, மா, தட  அனைத்தும்  பெரிய’  என்ற  பொருளைத்  தரக்கூடிய   சொற்கள்.  எனவே  கேட்கப்படும் உரிச்சொற்றொடர்கள் இவற்றில்    ஏதாவது   ஒன்றில்தான் ஆரம்பிக்கும்.. எ.கா.தடக்கை, தவப்பயன், உறுபடை இரட்டைக்கிளவி: ஒரு சொல் தொடர்ந்து இரண்டுமுறை வரும்.ஆனால் தனித்தனியே அவற்றைப் பிரித்தால் பொருளைத்தராது   அதுவே   இரட்டைக்கிளவி   ஆகும். எ.கா.சலசல,கலகல வார்த்தைகளை  சல, கல   என  பிரித்தால்   பொருளைத்  தராது.எனவே அது இரட்டைக்கிளவி எனப்படும். அடுக்குத்தொடர்: ஒரு சொல் தொடர்ந்து இரண்டுமுறை வரும்.ஆனால் தனித்தனியே அவற்றைப் பிரித்தால்பொருளைத்தரும். அதுவே அடுக்குத்தொடர் ஆகும்.எ.கா:பாம்பு பாம்பு,வருக வருக,வார்த்தைகளை பாம்பு,வருக என பிரித்தால் பொருளை  தரும்.எனவே அது அடுக்குத்தொடர் எனப்படும். ஈறுகெட்டஎதிர்மறைப்பெயரெச்சம்: ஈற்றெழுத்து கெட்டு வரும் பெயரெச்சம் ஈறுகெட்ட பெயரெச்சம் எனப்படும் எ.கா.வாடா மலர், தேரா மன்னன், பொய்யா மொழி, பேசா வாய், சிந்தா மணி. இதில் வாடா,தேரா,பொய்யா,பேசா.சிந்தா போன்றவை ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்ஆகும். ‘ஆ’ எனும் விகுதியைக் கொண்டே ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் அமையும். உவமைத்தொகை: உவமைக்குமிடையே போன்ற,போல,அன்ன,நிகர போன்ற உவம உருபுகள் மறைந்துவருமாயின் அவை உவமைத்தொகை எனப்படும்.. எ.கா.கனிவாய்,மலரடி ‘கனிவாய்’ என்ற சொல்லிற்கு பொருள் கனி போன்ற வாய் என்பதாகும். அப்படியானல் ‘போன்ற’என்ற உருபு மறைந்து வருவதைக் காணலாம். எனவே ‘கனிவாய்’ என்பது உவமைத்தொகை ஆகும்.     அதேபோல ‘மலரடி’ என்பதன் பொருள் மலர் போன்ற பாதம் என்பதாகும். இதிலும்    ‘போன்ற’ என்ற உருபு மறைந்து வருகிறது. எ.கா.மலர்முகம்,மலர்விழி,மலர்க்கை,தாய்மொழி,கயல்விழி. உருவகம்: உருவகத்தை புரிந்துகொள்வது மிகச்சுலபம்.  அதாவது ‘மலரடி’ […]

Pothu tamil

பெயர்ச்சொல்லின் வகையறிதல்

August 4, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

பெயர்ச்சொல்லின் வகையறிதல் ஒரு பெயர்ச்சொல்லைக் கொடுத்து அது எந்த வகை பெயர்ச்சொல் என கண்டறிக என்று வினா இருக்கும். பெயர்ச்சொல் வகைகள்: பெயர்ச்சொல்லை ஆறு வகையாகப் பிரிக்கலாம். அவை, 1) பொருட்பெயர்2) இடப்பெயர்3) காலப்பெயர்4) சினைப்பெயர்5) பண்புப்பெயர்6) தொழிற்பெயர்  என்பவை ஆகும். பொருட்பெயர்: உயிர் உள்ள, உயிர் இல்லாத பொருள்களின் பெயர்களைக் குறிப்பதுபொருட்பெயர் எனப்படும். (எ.கா) : அமுதன், வள்ளி, பொன், கிளி மேலே பார்த்த எடுத்துக்காட்டுகளில் உயிர்திணைப் பொருள்களும் உள்ளன. அஃறிணைப் பொருள்களும் […]