விடைக்கேற்ற வினாவை தேர்ந்தெடுத்து எழுதுதல்

Pothu tamil
Study material for tnpsc

விடைக்கேற்ற வினாவை தேர்ந்தெடுத்து எழுதுதல்

கொடுக்கப்பட்டிருக்கும் சொற்றொடர் விடை வடிவத்தில் இருந்தால், இதற்குரிய சரியான வினாவை கண்டுபிடிக்கும் பயிற்சி தான் விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கும் பயிற்சி. இது ஒவ்வொரு அரசுத் தேர்விலும் கேட்கப்படுகிறது.

பொதுவாக வினா, என்பது ஆறு வகைப்படும்.

1. அறிவினா

2. அறியாவினா

3. ஐய வினா

4. கொளல் வினா

5. கொடை வினா

6. ஏவல் வினா.

1. அறிவினா

தான் தெரிந்தவற்றை வேரு ஒருவரிடம் கேட்பது . எ.கா. திருக்குறளை எழுதியவர் யார்? அல்லது ஒரு ஆசிரியர் மாணவரிடம் கேட்கும் அனைத்து வகை கேள்விகளும் இவ்வகையை சார்ந்தது தான்.

2. அறியாவினா:

தெரியாத ஒன்றை தெரிந்தவரிடம் கேட்டல் அதாவது மாணவர் ஆசிரியரிடம் கேட்பது. எ.கா. ஐயா, இதன் பொருள் என்ன?

3. ஐய வினா:

தமக்கு ஏற்பட்டுள்ள ஐயத்தைப் போக்கிக் கொள்வது எ.கா. ஐயா மந்தவெளிக்கு இந்தப் பேருந்து செல்லுமா?

4. கொளல் வினா:

ஒன்றினை மற்றவரிடம் கேட்டுப் பெறுதல். எ.கா. சர்க்கரை உள்ளதா? எனக் கடைக்காரரிடம் கேட்டல்.

5. கொடை வினா:

ஒன்றை மற்றவருக்கு கொடுக்கும் பொருட்டு கேட்டல். எ.கா. காசு வேண்டுமா?

6. ஏவல் வினா:

ஒரு செயலை செய்வதற்காக கேட்கப்படும் வினா. எ.கா. படித்தாயா?

அதே போல விடை எட்டு வகைப்படும்:-

1. கட்டு விடை, 2. மறை விடை, 3. நேர் விடை, 4. ஏவல் விடை, 5. வினா எதிர் வினாதல் விடை, 6. உற்றது உணர்தல், 7. உருவது கூறல் விடை, 8. இனமொழி விடை.

1. கட்டு விடை: கேட்கப்படும் கேள்விக்கு சுட்டி விடையளிப்பது.எ.கா. மந்தைவெளிக்குச் செல்லும் வழி இதுதான்.

2. மறை விடை: கேட்கப்படும் கேள்விக்கு எதிர்மறைப் பொருளில் விடை இருத்தல்.எ.கா. நீ சாப்பிடுவாயா? இல்லை சாப்பிடமாட்டேன்.

3. நேர் விடை: வினவும் வினாவிற்கு உடன்பாட்டு பொருளில் விடையளித்தல். எ.கா.நாளை பள்ளிக்கு செல்வாயா? செல்வேன்.

4. ஏவல் விடை: கேட்கப்படும் வினாவிற்கு கேட்பவரையே ஏவுதல். எ.கா.கடைக்கு செல்வாயா? நீயே செல்

5. வினா எதிர் வினாதல் விடை: கேட்கப்படும் வினாவிற்கு விடை வினாவாகவே கூறுவது. எ.கா. நீ தேர்வுக்குப் படித்தாயா? படிக்காமல் இருப்பேனா

6.உற்றது உரைத்தல் விடை: கேட்கப்படும் வினாவிற்கு தனக்கு உற்றதையே விடையாகக் கூறுதல் எ.கா. நீ சாப்பிடுவாயா? பல் வலிக்கிறது.

Read More  திருக்குறள்

7. உருவது கூறுதல் விடை: கேட்கப்படும் வினாவிற்கு தனக்கு நிகழப் போவதை கூறுவது. எ.கா. பாவக்காய் சாப்பிடுகிறாயா? கசக்கும்.

8. இனமொழி விடை: கேட்கப்படும் வினாவிற்கு வேறு ஒரு விடையைக் கூறுவது இனமொழி விடையாகும். எ.கா. நீ ஆடுவாயா? பாடுவேன்.

விடைக்கேற்ற வினாவை தேர்ந்தெடுத்தல் சில உதாரணங்கள்:-

பதில்: காட்டுக்குப் போனவன் இராமன்.
கே: காட்டுக்குப் போனவன் எவன்?

பதில்: வந்தார் ஆசிரியர்
கே: வந்தவர் யார்?

பதில்: நான்கு மாடுகள் உழுகின்றன?
கே: எத்தனை மாடுகள் உழுகின்றன.

பதில்: நான் ஐந்து கிலோ காய் வாங்கினேன்.
கே: நீ எத்தனை கிலோ காய் வாங்கினாய்?

பதில்: தீமைகளில் கொலை தான் கொடுமையானது.
கே: தீமைகளில் எது கொடுமையானது?

பதில்: பேரறிஞர் என்று போற்றப்படுபவர் அறிஞர் அண்ணா?
கே: பேரறிஞர் என்ற போற்றப்படுபவர் யார்

பதில்: இராமாயணமும், மகாபாரதமும் இதிகாசங்கள் ஆகும்.
கே: இதிகாசங்கள் எவை/ யாவை?

பதில்: கம்ப ராமாயணம் ஆறு காண்டங்களை உடையது.
கே: கம்பராமாயணம் எத்தனை காண்டங்களை உடையது?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*