இலக்கண குறிப்பறிதல் – வினைத்தொகை

வினைத்தொகை: 

வினை என்பது ஒரு செயலை (வினை) குறிக்கும் சொல் வினைச்சொல்லாகும். இது நிகழ்காலம், எதிர்காலம், இறந்த காலம் என மூன்று காலங்களிலும் வரும். அவ்வாறு மூன்றுகாலங்களிலும் வரக்கூடியச் சொற்களை வினைத் தொகை என்கிறோம். 

எடுத்துக்காட்டு: முழங்கும் முரசு

இச்சொல் மூன்று காலங்களில் வரும். எப்படி என்றால், 
முழங்குகின்ற முரசு – இது நிகழ்காலம். அதாவது இப்போது முழங்கிக்கொண்டிருக்கிறது என பொருள் கொள்ளலாம்.

முழுங்கும் முரசு – எதிர்காலம். எதிர்காலத்தில் முழங்கும் முரசு.

முழங்கிய முரசு – இது இறந்த காலம். முன்பே முழங்கிய முரசு என்ற பொருளில் வரும். 

இதுபோல மூன்று காலங்களிலும் வந்து பொருள் தந்தால் அது வினைத்தொகை எனப்படும். 

வினைத்தொகைக்கான சில உதாரண வார்த்தைகளைப் பார்க்கலாம். 

1. நிறைநீர்
2. நிறைகூலம்
3. அலைகடல்
4. செய்தொழில்
5. சுடர்மணி
6. ஆடுகொடி
7. வரிசிலை
8. பொருபுலி
9. தொடுகழல்
10. வருபனி
11. உயர்தோளான்

Read More  ENDOCRINE SYSTEM-BIOLOGY- TNPSC,TET,RRB,SSC SCIENCE (GK) STUDY MATERIAL

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*