மோனை- TNPSC

Pothu tamil
Study material for tnpsc

மோனை :
ஒரு பாடல்/செய்யுளின் சீர்களிலோ, அடிகளிலோ முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை. மோனை இரண்டு வகைப்படும்.
அவை
அடிமோனை
சீர்மோனை
I. அடிமோனை:
முதலடி முதல் எழுத்தும் , 2ம் அடியின் முதல் எழுத்தும் ஒன்றி வருவது
(எ.கா):
தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்

II. சீர்மோனை:
சீர் தோறும் முதலெழுத்து ஒன்றி வருவது சீர்மோனை
(எ.கா):
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு
சீர்மோனை ஏழு வகைப்படும்
அவை
இணை (1,2)
பொழிப்பு (1,3)
ஒரூஉ (1.4)
கூழை (1,2,3)
கீழ்க்கதுவாய் (1,2,4)
மேற்கதுவாய் (1,3,4)
முற்று (1,2,3,4)
1. இணை மோனை : (1,2)
ஒரு அடியின் முதல் இரு சீர்களிலும் வருகிற மோனை, இணை மோனை.
(எ.கா):
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

2 . பொழிப்பு மோனை: (1,3)
ஒரு அடியின் முதல், மூன்றாம் சீர்களில் வருகிற மோனை பொழிப்பு மோனை
(எ.கா):
அரிக்குரல் கிண்கிணி அரற்றும் சீறடி”
3. ஒரூஉ மோனை (1.4)
ஒரு அடியின் முதல், நான்காம் சீர்களில் ஒன்றாக வந்தால் ஒருஉ மோனை
(எ.கா)
அம்பொன் கொழிஞ்சி நெடுந்தேர் அகற்றி

4. கூழை மோனை (1,2,3)
ஒரு அடியின் முதல் மூன்று சீர்களிலும் வருகிற மோனை, கூழை மோனை
(எ.கா):
‘அகன்ற அல்குல்’ அந்நுண் மருங்குதல்
5. கீழ்க்கதுவாய் மோனை (1,2,4)
ஒரு அடியின் முதல், இரண்டு மற்றும் நான்காம் சீர்களில் ஒன்றாக வருவது கீழ்க்கதுவாய் மோனை
(எ.கா):
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

6. மேற்கதுவாய் மோனை{1,3,4)
ஒரு அடியின் முதல், மூன்று மற்றும் நான்காம் சீர்களில் ஒன்றாக வருவது மேற்கதுவாய் மோனை
(எ.கா):
அரும்பிய கொங்கை அவ்வளை அமைத்தோள்

7.முற்று மோனை (1,2,3,4)
ஒரு அடியின் முதல் நான்கு சீர்களிலும் வருகிற மோனை முற்று மோனை
(எ.கா):
கற்க கசடற கற்பவை கற்றபின்

No votes yet.
Please wait...
Read More  MUSCULAR SYSTEM-BIOLOGY- TNPSC,TET,RRB,SSC SCIENCE (GK) STUDY MATERIAL

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*