இலக்கணக் குறிப்பறிதல் – பண்புத்தொகை

பண்புத்தொகை: 

சொற்களைப் பிரித்தால் நிலைமொழியில் “மை” விகுதி பெற்றுவரும் சொற்களனைத்தும் பண்புத்தொகை ஆகும்.

“தொன்னிறம்” இச்சொல்லைப் பிரிக்கும்போது “தொன்மை+நிறம்” எனப் பிரியும். இதில் நிலைமொழியில் “மை” விகுதி சேர்ந்து வந்திருப்பதால் இச்சொல்லிற்கான சரியான இலக்கணக்குறிப்பு பண்புத்தொகையாகும். 

உதாரணச் சொற்கள் ஒரு சிலவற்றைப் பார்ப்போம். 
இன்னுயிர் – இனிமை + உயர் ==> பண்புத்தொகை
பைங்கூழ் – பசுமை + கூழ் ==> பண்புத்தொகை
செவ்வேள் – செம்மை + வேள் ==>பண்புத்தொகை

இவ்வாறு பண்புத் தொகையை எளிதாக அறிந்துகொள்ள முடியும். 
மேலும் பண்புத் தொகைக்குரிய சொற்கள் ஒரு சிலவற்றைப் பார்ப்போம். 

1. செந்தமிழ் – செம்மை + தமிழ் ==>பண்புத்தொகை
2. நெடுந்தேர் – நெடுமை + தேர் ==> பண்புத்தொகை
3. மெல்லடி
4. கருவிழி
5. செங்கை
6. சீறடி
7. வெந்தழல்
8. பொற்காலம்
9. நற்செயல்
10. நவகவிதை
11. குறுநடை
12. நற்றூண்
13. பெருமகள்
14. பெரும்பெயர்
15. நெடும்படை
16. நெடுந்திரை 
17. பேரானந்தம்
18. பேரொளி
19. நல்லருள்
20. நல்லுயிர்
21. மொய்புலி
22. வெங்கரி
23. தண்தார்
24. நற்றூண்

Read More  பொருந்துதல் பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*