தொடரும் தொடர்பும் அறிதல்-TNPSC

Pothu tamil
Study material for tnpsc

தொடரும் தொடர்பும் அறிதல்

தொடரும் தொடர்பம் அறிதல் எனும் இப்பகுதியில் இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர், அடைமொழியால் குறிக்கப்பெறம் நூல் என இரண்டு பகுதிகளில் வினாக்கள் வரும்.

  • தேசிய கவி, சிந்துக்குத் தந்தை, விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக்கவி, கற்பூரச்சொற்கோ, தற்கால தமிழ் இலக்கிய விடிவெள்ளி ஷெல்லி தாசன், செந்தமிழ்த் தேனீ, பைந்தமிழ்த் தேர்ப்பாகன், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா- பாரதியார்
  • பாவேந்தர், புரட்சிக்கவி, புதுவைக் கவிஞர், பகுத்தறிவுக் கவிஞர், இயற்கை கவிஞர், புதுவைக்குயில், தமிழ்நாட்டின் ரசூல் கம்சத்தேவ், பூங்காட்டுத் தும்பி – பாரதிதாசன்
  • காவடி சிந்துக்குத் தந்தை (காவடி சிந்து நூல்), அண்ணாமலை கவிராயர் – அண்ணாமலை
  • காந்தீயக் கவிஞர் – நாமக்கல் கவிஞர்
  • சென்னையில் தமிழ்சங்கம் நிறுவியவர் – வேங்கட ராஜூலு ரெட்டியார்
  • உலகம் சுற்றிய முதல் தமிழ் அறிஞர் – மு.வரதராசனார்
  • சிலம்பு செல்வர் – ம.பொ.சிவஞானம்
  • சொல்லின் செல்வர் – ரா.பி.சேதுப்பிள்ளை
  • சொல்லின் செல்வன் – அனுமன்
  • தமிழ் தென்றல் – திரு.வி.க.
  • வள்ளலார் – ராமலிங்க அடிகளார்
  • கிருத்துவக் கம்பன் – எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
  • தனது கல்லறையில் தன்னை ஓர்
    தமிழ் மாணாக்கன் என எழுத சொன்னவர் – ஜி.யூ.போப்.
  • ஆசு கவி – காளமேகப் புலவர்.
  • எழுத்துக்கு – இளம்பூரணார்.
  • சொல்லுக்கு – சேனாவரையார்.
  • உரையாசிரியர் – இளம்பூரணார்.
  • உச்சிமேல் புலவர் கொள் – நச்சினார்க்கினியர்
  • தமிழ் வியாசர் –  நம்பியார் நம்பி
  • புதினப் பேரரசு – கோ.வி.மணிசேகரன்
  • ஏழிசை மன்னர் – தியாகராய பாகவதர்
  • மொழி ஞாயிறு – தேவநேயப் பாவாணர்
  • கவிக்கோ – அப்துல் ரகுமான்
  • தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட், தமிழ் வரலாற்று நாவலின் தந்தை – கல்கி
  • தமிழ் முனி, குருமுனி, குறுமுனி, பொதிகை முனி – அகத்தியர்
  • தொண்டர் சீர் பரவுவார், பக்தி சுவை நனி சொட்ட சொட்ட பாடிய கவி, உத்தம சோழ பல்லவராயன்,
    இராமதேவர் (கல்வெட்டுகள்), அருண்மொழித் தேவர் – சேக்கிழார்
  • இலக்கண தாத்தா – மே.வி.வேணுகோபால்
  • முத்தமிழ்க்காவலர் – கி.ஆ.பெ.விஸ்வநாதம்பிள்ளை
  • சிறுகதையின் மன்னன், தமிழ்நாட்டின் மாப்பசான்
    -புதுமைப்பித்தன்
  • தென்னாட்டு மாப்பசான், சிறுகதையின்
    சித்தன், சிறுகதையின் முடிசூடா மன்னன் – ஜெயகாந்தன்
  • தென்னாட்டு பெர்னாட்ஷா, பேரறிஞர், தென்னாட்டு காந்தி – அண்ணாதுரை
  • தமிழ்நாட்டு பெர்னாட்ஷா – மு.வரதராசனார்
  • புதுக்கவிதையின் முன்னோடி, தமிழில்
    புதுக்கவிதை தோற்றுவித்தவர் – ந.பிச்சமூர்த்தி
  • தமிழ் தாத்தா – உ.வே.சா
  • தமிழ் நாடகத் தந்தை – சம்பந்த முதலியார்
  • தமிழ் நாடக தலைமையாசிரியர், நாடக உலகின் இமயம் – சங்கரதாஸ சுவாமிகள்
  • உவமைக் கவிஞர் – சுரதா
  • தெற்காசிய சாக்ரடீஸ் – பெரியார்
  • தமிழ் உரைநடையின் தந்தை, தமிழ் இலக்கிய தோற்றுனர் – வீரமாமுனிவர்
  • குற்றியலுகர ஒலியை முதலில் உவமையாக எடுத்தாண்டவர், தமிழ்நாட்டின் ‘வேர்டு ஸ்வர்த்’, பாவலர் மணி, பாவலர் மன்னன், பிரெஞ்ச் நாட்டின் ‘செவாலியே’, தமிழ் நாட்டின் தாகூர், கவிஞரேறு
    – வாணிதாசன்.
  • கவி யோகி – சுத்தானந்த பாரதி.
  • தற்கால உரைநடையின் தந்தை – ஆறுமுக நாவலர்.
  • தனித் தமிழ் இலக்கியத்தின் தந்தை – மறைமலைஅடிகள்
  • வில்லுப் பாட்டுக்காரர் – கொத்தமங்கலம் சுப்பு.
  • ஆசிய ஜோதி – நேரு
  • ஆசிய ஜோதி நூலை எழுதியவர் – கவிமணி
  • மூல நூலை எழுதியவர் – எட்வின் அர்னால்ட்
  • திருவாதவூரர், தென்னவன், உத்தம சீலன் – மாணிக்கவாசகர்
  • தமிழ்நாட்டின் அட்லி சேஸ் – சுஜாதா
  • தென்னாட்டு தாகூர் – வெங்கட ரமணீ
  • பண்டித மணி – கதிரேசன் செட்டியார்
  • சிவபெருமானால் அம்மையே என அழைக்கப்பட்டவர், பேயார் – காரைக்கால் அம்மையார்
  • வெண்பா பாடுவதில் வல்லவர் – புகழேந்தி
  • பிள்ளைத் தமிழ் இலக்கிய முன்னோடி – பெரியாழ்வார்
  • தமிழில் முதல் இலக்கிய ஞானபீடவிருது. – அகிலன் (சித்திரப்பாவை)
  • தமிழில் உபநிடதங்கள் படைத்தவர் – தாயுமானவர்
  • கவிராட்சசன் – ஓட்டக்கூத்தர்
  • திவ்ய கவி,  அழகிய மணவாளர் தாசர் ,தெய்வக் கவி – பிள்ளைப் பெருமாள் (ஐயங்கார்)
  • நாட்டுப்புறவியலின் தந்தை – ஜேக்கப் கரீம்.
  • தமிழ் நாட்டுப்புறவியலின் தந்தை – வானமா மாலை.
  • மண் தோய்ந்த புகழினான் – கோவலன்
  • வீடு வீடாக பிச்சையெடுத்த தமிழ் தொண்டு செய்தவர் – ஆறுமுக நாவலர்
  • பொய்யா குலக்கொடி நதி – வைகை
  • கணக்காயர் என்பவர் – சோமசுந்தர பாரதியார்
  • நீதி நாயகர் – வேதநாயகம் பிள்ளை
  • கம்பரை ஆதரித்த வள்ளல் – சடையப்ப வள்ளல்
  • முச்சங்கம் வளர்கூடல் நகர் – மதுரை
  • தமிழ் நந்தி – மூன்றாம் நந்தி வர்மன்
  • தண்டமிழ் ஆசான், நன்னூல் புலவன், கூலவாணிகன் – சீத்தலைச் சாத்தனார்
  • நற்றமிழ்ப் புலவர், மதுரை தமிழ்ச் சங்கத் தலைவர் – நக்கீரர்
  • தமிழ் கவிஞருள் அரசர் – திருத்தக்கதேவர்
  • தமிழ் வேதம் செய்த மாறன், குருகைக் காவலன்,
    பராங்குசன், சடகோபன் – நம்மாழ்வார்
  • சூடிக்கொடுத்த சுடர்கொடி, வைணவம் தந்த செல்வி – ஆண்டாள்
  • குழந்தை கவிஞர் – அழ.வள்ளியப்பா
  • மக்கள் கவிஞர் – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்
  • சைவ சமயத்தின் செல்வி – மங்கையற்கரசியார்
  • திராவிட ஒப்பிலக்கண தந்தை – கார்டுவெல்
  • நவீன கம்பர் –மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  • நாவலர் – சோமசுந்தர பாரதி
  • இந்திய சினிமா தந்தை – தாதாசாகிப் பால்கே
  • ஆட்சி மொழிக் காவலர் – ராமலிங்கனார்
  • ஆஸ்தானக் கவிஞர் – நா.காமராசன்
  • கவியரசு – வைரமுத்து,கண்ணதாசன்
  • திருக்குறளார் – வி.முனுசாமி
  • கவிப்பேரரசு – வைரமுத்து
  • தசாவதாணி – செய்கு.தம்பியார்
  • பண்மொழிப் புலவர் –அப்பாதுரை (எ) மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  • நரை முடித்த சொல்லால் முறை செய்த அரசன் – கரிகாலன்
  • திருமுறைகளை தொகுக்குமாறு வேண்டிய அரசன் – முதலாம் ராஜராஜன்
  • சைவ உலக செஞ்ஞாயிறு, ஆளுடை அரசு,
    தர்ம சேனர், மருள் நீக்கியார், அப்பர் – திருநாவுக்கரசர்
  • தோடுடை செவியன், காளி வள்ளல்.
    ஆளுடைப் பிள்ளை, தோணி புறத் தோன்றல்,
    திராவிட சிசு, நாளும் இன்னிசையால்
    தமிழ் பரப்புவர் – திருஞான சம்பந்தர்
  • ஆளுடை நம்பி, திருநாவலூரார், நம்பி ஆரூரார்
    வன்தொண்டர், தம்பிரான் தோழர் – சுந்தரர்.
  • நல்லிசைப் புலவர் தமிழ் மூதாட்டி – ஔவையார்
  • மும்மொழிப் புலவர் – மறைமலை அடிகள்
  • விஷ்ணுசித்தர் – பெரியாழ்வார்.
  • தேசியம் காத்த செம்மல் (திரு.வி.க),
    பிரணவ கேசரி,வேதாந்த பாஸ்கர் –முத்துராமலிங்க தேவர்
  • திருக்குற்றால நாதர் கோவில் வித்வான் – திரிகூடராசப்ப கவிராயர்
  • இரட்டைப் புலவர்கள் – இளஞ்சூரியர், முதுசூரியர்
No votes yet.
Please wait...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*