தமிழ் இலக்கணம் (வகைகள்)

தமிழ் இலக்கணத்தில் ஐந்து வகைகள் உள்ளன. 

1. எழுத்திலக்கணம்

2. சொல்லிலக்கணம்

3. பொருளிலக்கணம்

4. யாப்பிலக்கணம்

5. அணியிலக்கணம்

எழுத்திலக்கணம்:

எழுத்து இருவகைப்படும். அவைகள்:
அ. முதலெழுத்து      ஆ. சார்பெழுத்து

அ.முதலெழுத்து:

அ முதல் ஔ வரையிலான உயிரெழுத்து பன்னிரண்டும், க் முதல் ன் வரையிலான மெய்யெழுத்து பதினெட்டும் முதலெழுத்து எனப்படும்.

ஆ.சார்பெழுத்து:

முதலெழுத்தை சார்ந்து இயங்கும் எழுத்துக்கள் சார்பெழுத்துகள் எனப்படும். சார்பெழுத்துகள்  பத்து வகைப்படும். அவைகள்:

1.உயிர்மெய்              6.குற்றியலிகரம்

2.ஆய்தம்                    7.ஐகாரக்குறுக்கம்

3.உயிரளபெடை      8.ஔகாரக்குறுக்கம்

4.ஒற்றளபெடை      9.மகரக்குறுக்கம்

5.குற்றியலுகரம்      10.ஆய்தக்குறுக்கம்

சொல்

ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்.
எ.கா: வீடு, கண், போ

பெயர்ச்சொல்

வினைச்சொல்

இடைச்சொல்

உரிச்சொல்

இலக்கிய வகைச் சொற்கள்

 பதம்

தொகைச் சொற்கள்

பொருள்

நம் இலக்கியஙளுக்குப் பாடுபொருள்களாக அமைவன

அகப்பொருள்களும்

புறப்பொருள்களும்

யாப்பு

யாப்பிலக்கணம் என்பது செய்யுள் எழுதுவதற்குரிய இலக்கணத்தைக் குறிக்கும். யாத்தல் என்னும் சொல் கட்டுதல் என்னும் பொருளை உடையது. எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய உறுப்புகளை ஒருசேரக் கட்டி அமைப்பது என்னும் பொருளிலேயே செய்யுள் யாத்தல் என்கிறார்கள். எனவே, இந்த யாத்தலுக்கு உரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும்

» அணி

அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணம். அணி பலவகைப்படும். அணி இலக்கணம் கூறும் தொன்மையான நூல் தண்டியலங்காரம் ஆகும். இந்நூலில் தன்மை அணி முதல் பாவிக அணி வரை 35 வகையான அணிவகைகள் பற்றி கூறப்படுகின்றது. அவற்றுள் சில,

1              பொருள் அணிகள்

2              சொல் அணிகள்

3              வகைப்படுத்தவேண்டிய அணி

பொருள் அணிகள்

அதிசய அணி(உயர்வு நவிற்சி அணி)

அவநுதியணி

ஆர்வமொழியணி(மகிழ்ச்சி அணி)

இலேச அணி

உதாத்தவணி

ஏதுவணி

ஒட்டணி

ஒப்புமைக் கூட்டவணி

ஒழித்துக்காட்டணி

சங்கீரணவணி

சமாகிதவணி

சிலேடையணி

சுவையணி

தற்குறிப்பேற்ற அணி

தன்மேம்பாட்டுரை அணி

தன்மையணி(தன்மை நவிற்சி அணி,இயல்பு நவிற்சி அணி)

தீவக அணி

நிதரிசன அணி(காட்சிப் பொருள் வைப்பு அணி)

Read More  இயைபு

நிரல்நிறை அணி

நுட்ப அணி

பரியாய அணி

பரிவருத்தனை அணி

பாவிக அணி

பின்வருநிலையணி(பொருள் பின்வருநிலையணி, சொற்பொருள் பின்வருநிலையணி)

புகழாப்புகழ்ச்சி அணி

புணர்நிலையணி

மயக்க அணி

மாறுபடுபுகழ்நிலையணி

முன்னவிலக்கணி

வாழ்த்தணி

விசேட அணி(சிறப்பு அணி)

விபாவனை அணி

விரோதவணி

வேற்றுப்பொருள் வைப்பணி

வேற்றுமையணி

சொல் அணிகள்

எதுகை

மோனை

சிலேடை

மடக்கு

பின்வருநிலையணி(சொல் பின்வருநிலையணி, சொற்பொருள் பின்வருநிலையணி)

அந்தாதி

வகைப்படுத்தவேண்டிய அணிகள்

இரட்டுறமொழிதல் அணி

இல்பொருள் உவமையணி

உயர்வு நவிற்சி அணி

உருவக அணி

உவமையணி

எடுத்துக்காட்டு உவமையணி

தன்மை நவிற்சி அணி

பிறிது மொழிதல் அணி

வஞ்சப் புகழ்ச்சியணி.

No votes yet.
Please wait...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*