ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்

ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால் அதற்கு ஓரெழுத்து ஒரு மொழிச் சொல் என்று பெயர். 

உதாரணம்: தை.. இந்த “தை” என்ற எழுத்தானது தமிழ்மாதங்களில் ஒன்றான மாதத்தின் பெயரைக் குறிக்கும் எழுத்தாகும். இதே எழுத்து “தைத்தல்” “பொருத்துதல்” என்ற பொருளிலும் வரும். இவ்வாறு ஒரே ஒரு எழுத்தானது ஒரு பொருளைத் தரக்கூடிய சொல்லாக வருவதறே ஒரேழுத்து ஒரு மொழியாகும். 

ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் 66 ஆக இருக்கிறது. ஒரெழுத்து ஒரு மொழிச் சொற்களை கீழே பட்டியலிட்டுள்ளேன். படித்துப் பயன்பெறவும்.

அ   – சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா

ஆ  – பசு(ஆவு), ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம்

இ   -சுட்டெழுத்து, இரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம்.

ஈ    – பறக்கும் ஈ, தா, குகை, தேனீ

உ   – சிவன், ஆச்சரியம், சுட்டெழுத்து, இரண்டு என்பதின் தமிழ் வடிவம்

ஊ – இறைச்சி, உணவு, ஊன், தசை

எ    – வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்

ஏ    – அம்பு, உயர்ச்சிமிகுதி

ஐ    – அழகு, உயர்வு, உரிமை, தலைவன், இறைவன், தந்தை

ஒ   -மதகு, (நீர் தாங்கும் பலகை)

ஔ  -பூமி, ஆனந்தம்

க    -வியங்கோள்  விகுதி

கா -காத்தல், சோலை

கி   -இரைச்சல் ஒலி

கு   -குவளயம்

கூ  -பூமி, கூவுதல், உலகம்

கை  -உறுப்பு, கரம்

கோ -அரசன், தந்தை, இறைவன்

கௌ   -கொள்ளு, தீங்கு

சா  -இறத்தல், சாக்காடு

சீ -லட்சுமி, இகழ்ச்சி, வெறுப்புச் சொல்

சு    -விரட்டடுதல், சுகம், மங்கலம்

சே -காலை

சை   -அறுவறுப்பு ஒலி, கைப்பொருள்

சோ  -மதில், அரண்

ஞா     -பொருத்து, கட்டு

தா -கொடு, கேட்பது

தீ    -நெருப்பு , தீமை

து   -உண்

தூ -வெண்மை, தூய்மை

தே -கடவுள்

தை  -தமிழ்மாதம், தைத்தல், பொருத்து

நா -நான், நாக்கு

நி   -இன்பம், அதிகம், விருப்பம்

நீ -முன்னிலை ஒருமை, நீக்குதல்

நூ -யானை, ஆபரணம், அணி

நே -அன்பு, அருள், நேயம்

Read More  சொற்களை ஒழுங்குப்படுத்திச் சொற்றொடராக்குதல்

நை   -வருந்து

நோ  -துன்ப்பபடுதல், நோவு, வருத்தம்

நௌ   -மரக்கலம்

ப -நூறு

பா -பாட்டு, கவிதை

பூ    -மலர்

பே -நுரை, அழகு, அச்சம்

பை   -கைப்பை

போ  -செல், ஏவல்

ம    -சந்திரன், எமன்

மா -பெரிய, சிறந்த, உயர்ந்த, மரம்

மீ    -மேலே , உயர்ச்சி, உச்சி

மூ  -மூப்பு, முதுமை

மே    -மேல்

மை  -கண்மை (கருமை), அஞ்சனம், இருள்

மோ -மோதல், முகரதல்

ய   -தமிழ் எழுத்து எனப்தின் வடிவம்

யா -ஒரு வகை மரம், யாவை, இல்லை

வ   -நாலில் ஒரு பங்கு “கால்” என்பதன் தமிழ் வடிவம்

வா    -வருக, ஏவல்

வி  -அறிவு, நிச்சயம், ஆகாயம்

வீ   -மலர் , அழிவு

வே   -வேம்பு, உளவு

வை -வைக்கவும், கூர்மை

வௌ  -வவ்வுதல்

நோ  -வருந்து

ள   -தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்

ளு -நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்

று   -எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்

No votes yet.
Please wait...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*