எதுகை

Pothu tamil
Study material for tnpsc

எதுகை :
ஒரு பாடல்/செய்யுளின் சீர்களிலோ, அடிகளிலோ இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.
எதுகை இரண்டு வகைப்படும்
அவை
அடி எதுகை
சீர் எதுகை
I.அடி எதுகை
அடிதோறும் 2 ம் எழுத்து ஒன்றி வருவது அடி எதுகை
(எ.கா):
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

II.சீர் எதுகை
சீர் தோறும் 2 ம் எழுத்து ஒன்றி வருவது சீர் எதுகை
சீர்எதுகை ஏழு வகைப்படும்
அவை
இணை (1,2)
பொழிப்பு (1,3)
ஒரூஉ (1.4)
கூழை (1,2,3)
கீழ்க்கதுவாய் (1,2,4)
மேற்கதுவாய் {1,3,4)
முற்று (1,2,3,4)
1. இணை எதுகை (1,2):
ஒரு அடியின் முதல் இரு சீர்களிலும் வருகிற எதுகை இணை எதுகை
(எ.கா):
ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியே

2. பொழிப்பு எதுகை (1.3) :
ஒரு அடியின் முதல், மூன்றாம் சீர்களில் வருகிற எதுகை பொழிப்பு எதுகை
(எ.கா):
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்

3. ஒரூஉ எதுகை (1.4) :
ஒரு அடியின் முதல், நான்காம் சீர்களில் ஒன்றாக வந்தால் ஒருஉ எதுகை (எ.கா): ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

4. கூழை எதுகை (1,2,3) :
ஒரு அடியின் முதல் மூன்று சீர்களிலும் வருகிற எதுகை, கூழை எதுகை
(எ.கா):
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை

5. கீழ்க்கதுவாய் எதுகை (1,2,4) :
ஒரு அடியின் முதல், இரண்டு மற்றும் நான்காம் சீர்களில் ஒன்றாக வருவது கீழ்க்கதுவாய் எதுகை
(எ.கா):
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

6. மேற்க்கதுவாய் எதுகை (1,3,4) :
ஒரு அடியின் முதல், மூன்று மற்றும் நான்காம் சீர்களில் ஒன்றாக வருவது மேற்கதுவாய் எதுகை
(எ.கா) :
கற்க கடசற கற்பவை கற்றபின்

7. முற்று எதுகை :
ஒரு அடியின் முதல் நான்கு சீர்களிலும் வருகிற எதுகை முற்று எதுகை
(எ.கா) :
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு

No votes yet.
Please wait...
Read More  TNPSC-AAO

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*