இலக்கண குறிப்பறிதல்

Pothu tamil
Study material for tnpsc

இலக்கண குறிப்பறிதல்

எண்ணும்மை:

கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் ‘உம்’  எனும் விகுதி வெளிப்படையாக வருமாயின்அதுஎண்ணும்மை எனப்படும்.

.கா.அல்லும் பகலும், காதலும் கற்பும, அவனும் இவனும்

உம்மைத்தொகை:

கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் ‘உம்’ எனும் சொல் வெளிப்படையாக தெரியாமல் மறைந்துவந்தால் அது உம்மைத்தொகை எனப்படும்.

.கா. அவன் இவன், இரவு பகல்,இராப்பகல் எனவே  ‘உம்’ எனும்  சொல்  வெளிப்படையாக வந்தால் அது எண்ணும்மை ஆகும்   அதுவேமரைந்து வந்தால் அது உம்மைத்தொகை.

உரிச்சொற்றொடர்:

ஒன்றை பெரிது படுத்திக் காட்டுவது உரிச்சொற்றொடர் ஆகும்.

.கா:மாநகரம், அதாவது  பெரிய  நகரம்  என்று  சொல்வதற்கு  பதிலாக  மாநகரம்  என்று சொல்கிறோம். இதுவே உரிச்சொற்றொடர் ஆகும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை மனதில் படித்துக் கொள்ளவும்..

சால,உறு, தவ, நனி, கூர், கழி, கடி, மா, தட  அனைத்தும்  பெரிய’  என்ற  பொருளைத்  தரக்கூடிய   சொற்கள்.  எனவே  கேட்கப்படும் உரிச்சொற்றொடர்கள் இவற்றில்    ஏதாவது   ஒன்றில்தான் ஆரம்பிக்கும்..

.கா.தடக்கை, தவப்பயன், உறுபடை

இரட்டைக்கிளவி:

ஒரு சொல் தொடர்ந்து இரண்டுமுறை வரும்.ஆனால் தனித்தனியே அவற்றைப் பிரித்தால் பொருளைத்தராது   அதுவே   இரட்டைக்கிளவி   ஆகும்.

.கா.சலசல,கலகல வார்த்தைகளை  சல, கல   என  பிரித்தால்   பொருளைத்  தராது.எனவே அது இரட்டைக்கிளவி எனப்படும்.

அடுக்குத்தொடர்:

ஒரு சொல் தொடர்ந்து இரண்டுமுறை வரும்.ஆனால் தனித்தனியே அவற்றைப் பிரித்தால்பொருளைத்தரும். அதுவே அடுக்குத்தொடர் ஆகும்.
.கா:பாம்பு பாம்பு,வருக வருக,வார்த்தைகளை பாம்பு,வருக என பிரித்தால் பொருளை  தரும்.எனவே அது அடுக்குத்தொடர் எனப்படும்.

ஈறுகெட்டஎதிர்மறைப்பெயரெச்சம்:

ஈற்றெழுத்து கெட்டு வரும் பெயரெச்சம் ஈறுகெட்ட பெயரெச்சம் எனப்படும்

.கா.வாடா மலர், தேரா மன்னன், பொய்யா மொழி, பேசா வாய்,

சிந்தா மணி. இதில் வாடா,தேரா,பொய்யா,பேசா.சிந்தா போன்றவை ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்ஆகும். ‘ஆ’ எனும் விகுதியைக் கொண்டே ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் அமையும்.

உவமைத்தொகை:

உவமைக்குமிடையே போன்ற,போல,அன்ன,நிகர போன்ற உவம உருபுகள் மறைந்துவருமாயின் அவை உவமைத்தொகை எனப்படும்..

எ.கா.கனிவாய்,மலரடி ‘கனிவாய்’ என்ற சொல்லிற்கு பொருள் கனி போன்ற வாய் என்பதாகும். அப்படியானல் ‘போன்ற’என்ற உருபு மறைந்து வருவதைக் காணலாம். எனவே ‘கனிவாய்’ என்பது உவமைத்தொகை ஆகும்.     அதேபோல ‘மலரடி’ என்பதன் பொருள் மலர் போன்ற பாதம் என்பதாகும். இதிலும்    ‘போன்ற’ என்ற உருபு மறைந்து வருகிறது.

.கா.மலர்முகம்,மலர்விழி,மலர்க்கை,தாய்மொழி,கயல்விழி.

உருவகம்:

உருவகத்தை புரிந்துகொள்வது மிகச்சுலபம்.  அதாவது ‘மலரடி’ என்ற சொல் உவமைத்தொகை என்பதைப் பார்த்தோம்.அச்சொல்லை திருப்பி எழுதினால் அது உருவகம். ‘மலரடி’ என்ற சொல்லை ‘அடிமலர்’ என்று மாற்றியமைக்கும் போது உருவகம் ஆகிறது

No votes yet.
Please wait...
Read More  ஓரெழுத்து ஒருமொழி-TNPSC

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*