இலக்கணம்- அகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல்

Pothu tamil
Study material for tnpsc

அகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல்

மாறி மாறி கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களை அகராதிப்படி வரிசைப் படுத்துவதே அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல் எனப்படும்

உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்துதல்:
முதலில் அ,ஆ,இ,ஈ என உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்த வேண்டும்.
(எ.கா):
ஒட்டகம் , இலை, அரும்பு, ஊஞ்சல்
விடை:
அரும்பு , இலை , ஊஞ்சல் , ஒட்டகம்

மெய்யெழுத்துக்களை வரிசைப்படுத்துதல் :
முதல் எழுத்திற்கு அடுத்த எழுத்து மெய்யெழுத்தாக இருந்தால் அதனை வரிசைப் படுத்தவேண்டும்.
(எ.கா):
நன்மை, நம்பகம் , நல்லது , நட்சத்திரங்கள்
விடை:
நட்சத்திரங்கள், நம்பகம், நல்லது, நன்மை

உயிர் மெய் எழுத்துக்களை வரிசைப்படுத்துதல் :
உயிர் மெய் எழுத்துக்களை க,கா,கி,கீ என்றே வரிசைப் படுத்த வேண்டும்.
குறிப்பாக எக்காரணத்தைக் கொண்டும் க,ங,ச என்ற முறையில் வரிசைப் படுத்தக் கூடாது.
(எ.கா):
மிருகம், முத்து, மௌனம், மதி
விடை:
மதி , மிருகம், முத்து , மௌனம்

No votes yet.
Please wait...
Read More  TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION ANNUAL RECRUITMENT PLANNER - 2019

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*