இயைபு

Pothu tamil
Study material for tnpsc

இயைபு :
ஒரு பாடல்/செய்யுளின் சீர்களிலோ, அடிகளிலோ அடியிறுதியில் ஓரெழுத்தோ, பல எழுத்துகளோ ஒன்றிவருவது இயைபு.
(எ.கா) :
நந்தவ னத்திலோ ராண்டி – அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி,
கொண்டுவந் தானொரு தோண்டி – அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி!
இதில் ”ண்டி” என்ற எழுத்துகள் ஒன்றி வருகின்றன.
இயைபு இரண்டு வகைப்படும்
அவை
அடி இயைபு
சீர் இயைபு
I. அடி இயைபு :
அடிதோறும் இறுதி எழுத்து, அசை, சொல் ஆகியன ஒன்றிவருவது அடி இயைபு
(எ-கா)
கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும் கொடிகள் வானம் படிதர மூடும்

II.சீர்இயைபு:
ஓரடியுள் இருக்கும் சீர்களின் இறுதி எழுத்து முதலாயின ஒன்றி இயைய வருமாறு தொடுப்பது சீர் இயைபு.
சீர்இயைபு ஏழு வகைப்படும்
அவை
இணை (1,2)
பொழிப்பு (1,3)
ஒரூஉ (1.4)
கூழை (1,2,3)
கீழ்க்கதுவாய் (1,2,4)
மேற்கதுவாய் (1,3,4)
முற்று (1,2,3,4)
1. இணை இயைபு (1,2)
ஒரு அடியின் 1,2 ஆம் சீர்களின் ஈற்றெழுத்து ஒன்றி வருவது இணை இயைபு
(எ-கா) :
மொய்த்துடன் தவழும் முகிலே பொழிலே

2.பொழிப்பு இயைபு (1,3)
ஒரு அடியின் ஒன்றாம் சீரிலும் மூன்றாம் சீரிலும் இறுதி எழுத்து ஒன்றி வருவது பொழிப்பு இயைபு .
(எ-கா) :
‘மற்றதன் அயலே முத்துறழ் மணலே’

3. ஒரூஉ இயைபு(1.4)
ஒரு அடியின் ஒன்றாம் நான்காம் சீர்களில் இறுதி எழுத்து ஒன்றி வருவது ஒரூஉ இயைபு.
(எ-கா) :
நிழலே இனியதன் அயலது கடலே

4.கூழை இயைபு (1,2,3)
ஒரு அடியின் ஒன்றாம் இரண்டாம் மூன்றாம் சீர்களில் இறுதி எழுத்து ஒன்றி வருவது கூழை இயைபு. (எ-கா) :
மாதர் நகிலே வல்லே இயலே

5. கீழ்க்கதுவாய் இயைபு (1,2,4)
ஒரு அடியின் ஒன்றாம் இரண்டாம் நான்காம் சீர்களின் இறுதி எழுத்து ஒன்றி வருவது கீழ்க்கதுவாய் இயைபு.
(எ-கா) :
பல்லே தவளம் பாலே சொல்லே

6. மேற்கதுவாய் இயைபு (1,3,4)
ஒரு அடியின் ஒன்றாம் மூன்றாம் நான்காம் சீர்களில் இறுதி எழுத்து ஒன்றி வருவது மேற்கதுவாய் இயைபு
(எ-கா) :
வில்லே நுதலே வேற்கண் கயலே

7. முற்று இயைபு (1,2,3,4 )
ஒரு அடியின் நான்கு சீர்களிலும் ஈற்றெழுத்து ஒன்றி வருவது முற்று இயைபு
(எ-கா) :
புயலே குழலே மயிலே இயலே

No votes yet.
Please wait...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*