அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்தல் TNPSC

Pothu tamil
Study material for tnpsc

அகரவரிசை :

அகரவரிசை (alphabetical order) என்பது ஒரு மொழியில் உள்ள எழுத்துக்களை அம்மொழியின் முறைப்படி அடுக்கப்பட்ட எழுத்துக்களின் வரிசை ஆகும். ஏறத்தாழ எல்லா மொழிகளிலுமே அகரம் முதல் எழுத்தாக இருப்பதால் அகரம் தொடங்கி எழுத்துக்கள் வரிசைப்படுத்தப்படுகின்றன. தனித்தனி எழுத்துக்களாக கோர்த்து சொற்கள் ஆக்கப்படும் மொழிகளுக்கு இவ்வரிசை அடிப்படையான ஒன்று. இதனைத் தமிழில் நெடுங்கணக்கு என்று சொல்லுவர். ஏதாவதொரு பணிக்காக சொற்களை வரிசைப்படுத்தும் பொழுது, அகரத்தில் தொடங்கும் சொற்களை முதலில் தொகுத்து, பின் அடுத்து வரும் எழுத்துக்களில் தொடங்கும் சொற்களை வரிசைப் படுத்துவர். ஒவ்வொரு சொல்லின் முதல் எழுத்தைப்போலவே அடுத்து வரும் எழுத்துக்களும் அகர வரிசைப்படி அமைக்கப்படும்.

தமிழும் அகரவரிசையும் :

தமிழின் அகர வரிசை அமைந்த முறை: (1) முதலில் 12 உயிரெழுத்துக்கள் கொண்ட வரிசை, (2) தனி எழுத்தாகிய ஆய்த எழுத்து, (3) 18 மெய்யெழுத்துக்கள் கொண்ட வரிசை, (4) உயிரோடு சேர்ந்த மெய்யெழுத்துக்களாகிய 216 உயிர்மெய் எழுத்துக்கள். எனவே மொத்த எழுத்துக்கள் 247 ஆகும்.

உயிர்: அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ

ஆய்த எழுத்து: ஃ

மெய்: க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் ழ் ள் வ் ற் ன்.

உயிரெழுத்துக்கள்→ மெய்யெழுத்துக்கள்

க்காகிகீகுகூகெகேகைகொகோகௌ
ங்ஙாஙிஙீஙுஙூஙெஙேஙைஙொஙோஙௌ
ச்சாசிசீசுசூசெசேசைசொசோசௌ
ஞ்ஞாஞிஞீஞுஞூஞெஞேஞைஞொஞோஞௌ
ட்டாடிடீடுடூடெடேடைடொடோடௌ
ண்ணாணிணீணுணூணெணேணைணொணோணௌ
த்தாதிதீதுதூதெதேதைதொதோதௌ
ந்நாநிநீநுநூநெநேநைநொநோநௌ
ப்பாபிபீபுபூபெபேபைபொபோபௌ
ம்மாமிமீமுமூமெமேமைமொமோமௌ
ய்யாயியீயுயூயெயேயையொயோயௌ
ர்ராரிரீருரூரெரேரைரொரோரௌ
ல்லாலிலீலுலூலெலேலைலொலோலௌ
வ்வாவிவீவுவூவெவேவைவொவோவௌ
ழ்ழாழிழீழுழூழெழேழைழொழோழௌ
ள்ளாளிளீளுளூளெளேளைளொளோளௌ
ற்றாறிறீறுறூறெறேறைறொறோறௌ
ன்னானினீனுனூனெனேனைனொனோனௌ
Read More  EXCRETORY SYSTEM -BIOLOGY- TNPSC,TET,RRB,SSC SCIENCE (GK) STUDY MATERIAL

வாருங்கள் அகர வரிசைப்படி சொற்களை எவ்வாறு சீர் செய்வது என்பதை பார்ப்போம்:-

குறிப்பு : மேற்கண்ட அட்டவணையை அடிப்படையாகக் கொள்க:-

வழக்கமாக சொல்வது : ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி.

இதனை அகர வரிசைப்படி எழுதும் போது: செவ்வாய், ஞாயிறு, திங்கள், புதன், வியாழன் என்று வரும்.

இதே போல…

‘கபிலர், கம்பர், புகழேந்தி, பாரதி’ இதனை அகர வரிசைப்படி எழுதினால் ‘கபிலர், கம்பர், பாரதி, புகழேந்தி’ என்ற வரிசையில் எழுதுவோம்.

‘சாட்டை, சீப்பு, சிவப்பு, சோறு, சங்கு’ இதனை அகரவரிசைப்படி எழுதினால் ‘சங்கு, சாட்டை, சிவப்பு, சீப்பு, சோறு; என்று இந்த வரிசையில் எழுதலாம்.

அதே போல, ‘முடவன், மாதவி, மேடு, மைதிலி’ இவற்றை அகர வரிசைப்படி எடுத்து எழுதினால், இவ்வாறு வரும் ‘மாதவி, முடவன், மேடு, மைதிலி’

No votes yet.
Please wait...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*